Pages

Sunday, March 6, 2011

ஜெயலலிதா - நடிகர் விஜய் சந்திப்பு:கிராபிக்ஸ் படம் வினியோகம்

அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெயலலிதாவுக்கு, நடிகர் விஜய் மலர் கொத்து வழங்குவது போல, கிராபிக்ஸ் மூலம் தயார் செய்த புகைப்படம், சேலத்தில் அ.தி.மு.க., வினருக்கு வினியோகம் செய்யப்படுகிறது.தமிழகத்தில் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் ஜுரம் சூடுப்பிடித்துள்ளது. பிரதான கட்சிகள், தேர்தல் நேரத்தில், நடிகர், நடிகைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்துவது வழக்கம். அரசியல் பிரமுகர்களின், நெருக்கடிக்குள்ளாகும் நடிகர்கள், தாமாகவே கட்சிகளில் தங்களை இணைத்து கொள்வர்.கடந்த சில மாதங்களுக்கு முன், நடிகர் விஜய்க்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. விஜய் நடித்த படங்களை தியேட்டரில், திரையிடுவதற்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. அதனால், விஜய் கடும் அதிருப்தி அடைந்தார். இந்த சூழலில், விஜயின் தந்தை சந்திரசேகர், அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெயலலிதாவை சந்தித்தார்.அதனால், நடிகர் விஜய் விரைவில், அ.தி.மு.க., வில் சேரப் போகிறார் என்ற தகவல் பரவியது. சமீபத்தில், இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, நாகபட்டனத்தில், விஜய் பொதுக்கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில், அ.தி.மு.க., வுக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அ.தி.மு.க., தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் அ.தி.மு.க., வுக்கு ஆதரவாக விஜய் பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று கருதுகின்றனர்.இந்நிலையில், நடிகர் விஜய், ஜெயலலிதாவுக்கு மலர் கொத்து வழங்குவது போல கிராபிக்ஸ் மூலம் தயார் செய்யப்பட்ட புகைப்படம், சேலம் அ.தி.மு.க., நிர்வாகிகள் உருவாக்கியுள்ளனர். அ.தி.மு.க., மற்றும் தொண்டர்களிடம் பரவலாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment