Wednesday, March 23, 2011
வருகிறார் தாடி விஜய்!
டேராடூனில் நண்பன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்து திரும்பியிருக்கும் இயக்குனர் ஷங்கர்,முதல் முறையாக விஜய் உடனான காம்பினேஷனை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். விஜய்-ஜீவா- ஸ்ரீகாந்த் நண்பர்களின் கெமிஸ்ட்ரி திரையில் மட்டுமல்ல,திரைக்கு வெளியேயும் அற்புதமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.எந்திரனில் இருந்து முற்றிலும் வேறுப்பட்ட கதையில் இத்தனை பெரிய நட்சத்திரங்களுடன் பணிபுரிவது எனக்கே மாறுப்பட்ட அனுபவமாக இருக்கிறது என்கிறார் ஷங்கர்.இது ஒருபுறம் இருக்க நண்பன் படத்தில் தனது ஹேர் ஸ்டைலை மாற்ற விஜய் சம்மதிக்கவில்லை என்று முதலில் வெளியான தகவல்கள் வதந்தி என்பது இப்போது தெரியவந்திருக்கிறது.
நண்பன் படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் தனது கேரக்டருக்காக தாடி வைத்துக் கொள்ள சம்மதித்திருக்கிறார் விஜய்.இதை ஷங்கர் அலுவலக வட்டாரங்கள் உறுதி செய்கின்றன. தாடிக்குப்பொருத்தமாக ஹேர் ஸ்டைலிலும் மாற்றங்கள் செய்து கொள்ள இருக்கிறாராம்.தாடி விஜய் என்று கேட்கும்போதே எதிர்பார்ப்பு எகிறுதே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment