பொன்னியின் செல்வனில் உறுதி செய்யப்பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்
டைரக்டர் மணிரத்னம் அடுத்து பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்க உள்ளார். கல்கியின் நாவலை மையமாக வைத்து உருவாக போகும் இப்படத்தில் விஜய், விஷால், ஆர்யா, தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, அனுஷ்கா ஆகியோர் நடிக்கின்றனர்.மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் மணிரத்னம். இதனிடையே இப்படத்திற்கு யார் இசையமைப்பார் என்ற கேள்வி எழுந்தது? வழக்கம் போல் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மணிரத்னம் தன்னுடைய பழைய ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜாவை இசையமைக்க திட்டமிட்டு இருந்ததாக செய்திகள் வெளியாகின.மேலும் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும், இளையராஜாவும் சேர்ந்து இசையமைக்க போவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் எதிர்பார்த்தது போலவே இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மானே இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE
No comments:
Post a Comment