Pages

Thursday, March 24, 2011

விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எஸ்.ஏ.சந்திரசேகரன்


 அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகரன் மூன்று முறை சந்தித்து பேசியது, அஜித்தை விஜய் சந்தித்தது, ஷங்கரின் "நண்பன்' பட விவகாரம், மீனவர்களுக்கு ஆதரவாக நாகையில் கண்டன கூட்டம் என கடந்த மாதங்களின் "சென்சேஷனல் நியூஸ் மேக்கிங்' விஜய் தரப்புதான். இப்போது எஸ்.ஏ.சி.யின் "சட்டப்படி குற்றம்' படத்துக்கும் பிரச்னை. ஆளுங்கட்சி தரப்பை படம் சாடுவதால் படத்தை வெளியிட முடியாமல் தடுக்கிறார்கள் என தகவல் வர அவருடன் திடீரென ஒரு சந்திப்பு.

 என்ன பிரச்னை? யார்தான்  இடையூறாக இருக்கிறார்கள்?

அதுதான் எனக்கும் தெரியவில்லை. நான் எப்போதும் சிறு கால இடைவெளிக்குப் பின் சமுதாயம் சார்ந்த படங்களை எடுப்பது வழக்கம். அது போல்தான் இந்த "சட்டப்படி குற்றமும்'. தான் சார்ந்த சமுதாயத்தின் மீது கோபம் கொண்ட இளைஞர்கள் ஒன்று கூடி போராட ஆரம்பிக்கும் போது ஒரு புரட்சி வெடிக்கிறது. இதுதான் கதை. என் பழைய படங்களைப் போல்தான் இந்த படத்திலும் சமுதாயக் கருத்துக்கள் பொதிந்திருக்கின்றன. ஆனால் அந்தப் படங்களை விட ஒரு படி மேலே போய் நிற்கும். படத்தை பார்த்த எல்லோருக்கும், குறிப்பாக விநியோகஸ்தர்களுக்கும் திருப்தி. ஆனால் வாங்கத்தான் யாரும் வரவில்லை. இந்தப் படத்தை வாங்கினால்.... தனிப்பட்ட முறையில் விநியோகஸ்தர்கள் மிரட்டப்பட்டதாகத் தெரிந்து கொண்டேன். அதனால் இப்போது நானே ரிலீஸ் செய்கிறேன். இதே வடபழனியில் பிளாட்பாரத்தில் முன்னொரு காலத்தில் படுத்து கிடந்தவன்தான் நான். அதனால் பணத்தை பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் இதில் நான் சொல்லியிருக்கும் கருத்து எல்லோரையும் சென்று சேர வேண்டும்.

தேர்தல் சமயத்தில் படம்  வெளிவருவதால்தான் இந்தப் பிரச்னை என நினைக்கிறீர்களா?

 ÷தேர்தல் ஏப்ரல் மாதத்தில் வரும் என்று போன மாதம் வரை யாருக்கும் தெரியாது. நானும் அது போல்தான் ரிலீஸ் தேதி வைத்தேன். ஆனால் திடீரென தேர்தல் ஏப்ரல் மாதமே வந்து விட்டது. இதற்கு யார் பொறுப்பாவது. தயாரிப்பாளர் விரும்பும் நேரத்தில்தான் ஒரு படம் திரைக்கு வர வேண்டும். "நீதிக்கு தண்டனை' எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில்தான் ரிலீஸ் ஆனது. "நான் சிகப்பு மனித'னும் அப்படிதான். இதில் ஒரு கதை சொல்லியிருக்கிறேன். அது கற்பனையாக இருக்கலாம். அந்த கற்பனையில் உண்மையும் கொஞ்சம் கலந்திருக்கலாம். இதுக்கு யார் பொறுப்பாவது. நான் சினிமாக்காரன். என் வேலையை நான் பார்க்கிறேன். "நீதிக்கு தண்டனை' எடுக்கும் போது நான் தி.மு.க. உறுப்பினர் இல்லை. "சட்டப்படி குற்றம்' எடுக்கும் போது நான் அதிமுகவுக்கு சொந்தமானவன் அல்ல. ஆதரவும் இல்லை. இப்போதைக்கு அரசியலும் இல்லை.

ஆனால் அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் பிரசாரம் செய்வார் என்றும், அந்த கட்சிக்கு வாக்களிக்க கோரி தன் ரசிகர்களுக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் வைப்பார் என்றும் சொல்லப்படுகிறதே?

 விஜய் எந்த மனநிலையில் இருக்கிறார் என்று ஒவ்வொரு ரசிகனுக்கும் தெரியும். பொது மக்களுக்கே விஜயின் மனநிலை புரிந்து இருக்கிறது. அவர் ஒரு அமைதியான போராளி. அவருக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். எல்லா விஷயங்களையும் புரிந்து வைத்திருக்கிறார். அனைத்து விதத்திலும் செல்வாக்கில் இருக்கும் நமக்கே இவ்வளவு பிரச்னையா? என்று அவர் யோசிக்கிறார். இப்போதைக்கு அரசியல் இல்லை என்று சொல்லியும் நம்மை ஏன் குத்துகிறார்கள்? என சிந்திக்கிறார். அவர் பலவீனமானவர் அல்ல, பலமானவர் என்பது இதில் இருந்தே புரிகிறது. கண்டிப்பாக விஜய் யாருக்கு ஆதரவாகவும் தேர்தல் பிரசாரம் செய்யமாட்டார்.

விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?

 அது அவர்களுக்கே தெரியும்.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment