Pages

Showing posts with label VIJAY POLITICS. Show all posts
Showing posts with label VIJAY POLITICS. Show all posts

Friday, February 25, 2011

எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்


நாகையில் இலங்கை அரசைக் கண்டித்துப் பேசிய விஜய் சில பாடல்களையும் பாடினார். கட்டுப்படுத்த முடியாத கூட்டம், கூச்சலும் அலறலுமாகவே இருந்தது. விஜய்யே மேடைக்கு வந்து அமைதியாக நடந்து கொள்ளுங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டும் அவர் ரசிகர்கள் கேட்பதாக இல்லை

நான் மீனவ நண்பன் படத்தை பார்த்திருக்கிறேன். அந்தப் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்ன விஜய் கடல் மேல் பிறக்க வைத்தான்... எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்... என்று எம்.ஜி.ஆர் பாட்டைப் பாடினார்.

அரசியல் சார்ந்த விஷயங்களை பேசி முடித்த விஜய் என் படத்தைப் பற்றியும் சில விஷயங்கள் பேச நினைக்கிறேன். காவலன் பல தடைகளை தாண்டி வெளிவந்தது. அதற்கு நீங்கள் ஆதரவு கொடுத்து வெற்றிப் படமாக கொண்டாடினீர்கள். இப்போது வேலாயுதம் நடந்து கொண்டு இருக்கிறது. இது உங்களுக்கு பிடித்த வகை மாஸ் படமாகவே இருக்கும். 

நான் 51  படங்கள் நடித்து விட்டேன். இத்தனைப் படங்களில் எனக்கு கிடைக்காத பாடல் எனக்கு வேலாயுதம் படத்தில் அமைந்தது. அது உங்களைப் பற்றிய பாடல். நான் எப்போதும் உங்களுக்கா இருக்கிறேன் என்று சொல்லி, கொஞ்சம் அமைதி காத்தீர்கள் என்றால் அந்தப் பாடலை பாடுகிறேன் என்றார். ஆனால் விஜய் எவ்வளவோ கையசைதாலும் ரசிகர் அமைதியாவது போல் தெரியவில்லை.

வேறு வழியில்லை என் நினைத்த விஜய் அந்த பாடலை உரக்கக் கத்திப் பாடினார். அவர் கத்த... பதிலுக்கு அவர் ரசிகர்கள் கத்த... ஒரேக் கதறல் தான்! விஜய் ரசிகர்களை உருக வைத்த வேலாயுதம் படத்தின் அந்தப் பாடல் இதோ...

ரத்தத்தின் ரத்தமே...
எனது உடன்பிறப்பே...
சொந்தத்தின் சொந்தமே... 
நான் இயங்கும் உயிர் துடிப்பே!
 
அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே... 
என் வாழ்க்கை உனக்கல்லவா! 
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்...  
என் வாசம் உனக்கலாவா..

நன்றி: நக்கீரன்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

ரஜினி பாணியில் விஜய் தேர்தல் நேர வாய்ஸ்


மூன்று முறை அதிமுக தலைமையை சந்தித்துவிட்டார் எஸ்.ஏ.சி. இன்னும் முப்பது படங்களில் நடித்துவிட்டுதான் விஜய் அரசியலுக்கு வருவார். ஆனால் நான் அதற்கு முன்பே வந்துவிடுவேன் என்று கூறியிருக்கிறார் அவர். இந்த விளக்கம், இதற்காகதான் அவர் ஜெ.வை சந்தித்தாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது மக்களிடம்.

என் பிள்ளைகளுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி கொடுக்கிற பட்சத்தில் தன் தொண்டர்களுக்காக விஜய் குரல் கொடுப்பார் என்பதும் எஸ்.ஏ.சியின் மிக முக்கியமான ஸ்டேட்மென்ட்டாக இருக்கிறது. அப்படியென்றால் ரஜினியை போல தேர்தல் நேரத்தில் விஜய் 'வாய்ஸ்'கொடுப்பாரோ?

பிரபல வார இதழ் எழுப்பியிருக்கும் சந்தேகத்திற்கு பின் வருமாறு பதில் சொல்லியிருக்கிறார் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி. "விஜய் ரசிகர்களுக்கு, என் பிள்ளைகளுக்கு உரிய அங்கீகாரத்தை யாராவது அளித்தால், அவர்களுக்கு விஜய்யின் அதரவு இருக்கும். அங்கீகாரம் கிடைக்கும் போது அந்த ரசிகர்களுக்காக அவர்களது வெற்றிக்காக ஆதரவு கொடுக்கும் கட்சிக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும். தனது தொண்டர்கள் ஜெயிக்க வேண்டும் என்று தலைவன் ஆசைப்படுவதில் தவறில்லையே!

Thanks : vizhiyepesu
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Saturday, January 29, 2011

VIJAY LATEST INTERVIEW NDTV


Vijay in NDTV Hindu 


YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE