Pages

Saturday, March 26, 2011

மொதல்ல விஜய்.. அடுத்து அஜீத்..!


அஜீத் நடிக்க இருக்கும் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் ஜெயம் ராஜா விஜய் நடிக்க,  வேலாயுதம் படத்தை இயக்கி வருகிறார் ராஜா. சில தினங்களுக்கு முன் வேலாயுதம் படப்பிடிப்பு நடத்த தளத்திற்கு அருகே மங்காத்தா படப்பிடிப்பு நடந்ததால் அஜீத்தும் விஜய்யும் சந்தித்து கொண்டனர்.அஜீத்திற்கு ஒரு வாட்ச் ஒன்றை பரிசளித்து 'நாங்கள் ஒன்றும் எதிரிகள் அல்ல; நெருங்கிய நண்பர்கள் தான்' என்பதை உறுதிப்படுத்தினார் விஜய். அதனை அடுத்து இருவரும் சந்தித்து அடிக்கடி தளத்தில் சந்தித்து கொண்டது ஒரு புறம் இருந்தாலும், வேலாயுதம் இயக்குனர் ராஜாவும் அஜீத்தை சந்தித்து பேசியிருக்கிறார்.வெங்கட்பிரபு அஜீத், விஜய் இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசையை வெளிபடுத்த, ராஜாவோ விஜய் படத்தை அடுத்து உங்களின் படத்தை இயக்க வேண்டும் என்று அஜீத்திடம் ஆசை வெளிப்படுத்தி  இருக்கிறார். ராஜாவின் ஆசைக்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார் அஜீத். ஆகையால் மங்காத்தா படத்தை அடுத்து பில்லா 2 படத்தில் நடிக்கவிருக்கும் அஜீத், அதனை அடுத்து ராஜாவின் இயக்கத்தில் நடிக்கலாம் என்று ராஜாவின் நெருங்கிய வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

1 comment:

  1. ராஜா, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அஜித்துக்கு ஒரு கதை ரெடி பண்ணிக் கொண்டிருந்தார்

    ReplyDelete