விக்ரமுக்கு 'நோ' விஜய்க்கு 'எஸ்'.. ரஜினிக்கு..?
விஜய் நடித்து வரும் நண்பன் படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் ராணா படத்தில் இலியானா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கேடி படத்தில் ரவி கிருஷ்ணாவிற்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் இலியானா. அத்திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனை அடுத்து தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி முன்னணி நடிகையாக வலம் வந்தி கொண்டு இருக்கிறார். இந்நிலையில் மதராசபட்டினம் விஜய் இயக்கத்தில் 'தெய்வ திருமகன்' படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக கூட நடிக்க வந்த வாய்ப்பை புறக்கணித்தார் இலியானா..இந்நிலையில் 'நண்பன்' பட வாய்ப்பு கதவைத் தட்டியது. 3 இடியட்ஸ் ரீமேக், ஷங்கரின் இயக்கம், விஜய்க்கு ஜோடி என்றவுடன் நண்பன் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து நட்புக்கரம் நீட்டினார்.ரஜினி நடிக்கப் போகும் திரைப்படம் ராணா. இதில் ரஜினி மூன்று வேடத்தில் நடிக்க இருப்பதால் மூன்று நாயகிகளை தேடி வந்தனர். முதலாவதாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மற்ற இரு நாயகிகளுக்காக பேச்சுவார்த்தையில் வித்யா பாலன், ரேகா, ஹேமா மாலினி, அசின், அனுஷ்கா என ஏகப்பட்ட பெயர்கள் பட்டியலில் வந்து கொண்டே இருக்க, இப்போது இலியானா பெயரும் அதனுடன் இணைந்திருக்கிறது. இதில் ரேகா நடிக்க இயலாது என கூறி விட்டதால், அந்த வேடத்தில் ஹேமமாலினி நடிக்கலாம் என்கிறது படக்குழு.ஏப்ரல் 18 முதல் படப்பிடிப்புக்கு போக வேண்டும் என்று ரஜினி சொல்லியிருப்பதால், போட்டி பலமாக இருக்கிறது.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE
No comments:
Post a Comment