ஓட்டு : விஜய் அப்பா வேண்டுகோள்
வாக்காளர்களுக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கியுள்ள படம் ’’சட்டப்படி குற்றம்’’. இப்படத்தில் சத்யராஜ், சீமான், ராதாரவி நடித்துள்ளனர். இந்தப் படத்தில், அரசியல்வாதியால் பாதிக்கப்படும் நபராக சத்யராஜ் வருகிறார். பின்னர் போராளியாக மாறுகிறார். தன்னை போலவே பாதிப்புக்கு உள்ளான இளைஞர்களை இவர் ஒன்று சேர்த்து சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். அது முடிந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.படம் ஓடிக்கொண்டிடுக்கும் நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்யில், ‘’வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் ஓட்டு போடப்போகும் முன்பு இந்த சட்டப்படி குற்றம் படத்தை பார்த்துவிட்டு செல்லுங்கள்.அப்போதுதான் நீங்கள் யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்பது புரியும்’’ என்று கூறியுள்ளார்.Thanks : Nakkeran
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE
No comments:
Post a Comment