Pages

Monday, March 28, 2011

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு ஆதரவு


நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்துக்காக திருச்சியில் முகாமிட்டுள்ளார். அவரை நடிகர் விஜய்யின் தந்தையும் டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் இன்று பிற்பகல் சந்தித்து பேசினார்.இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து காரில் திருச்சி புறப்பட்டு சென்றார். ஜெயலலிதாவை ஏற்கனவே இரண்டுமுறை எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்தித்து பேசினார்.ஆனாலும் இன்று மூன்றாவது தடவையாக ஜெயலலிதாவும் எஸ்.ஏ.சந்திர சேகரனும் சந்தித்து பேசி தேர்தல் குறித்து ஆலோசனை செய்தனர்.


இச்சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகரன், 

’’விஜய்யின் ‘மக்கள் இயக்கம்’ அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யும்.   மக்கள் இயக்கத்தினர் அதிமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வார்கள்.  இதை நான் அதிகாரப்பூர்வமாம அறிவிக்கிறேன்.நான்  திறந்த வேனில் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்’’ என்று கூறினார்.

Thanks : Nakkeran
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment