Pages

Wednesday, March 2, 2011

விஜய் படத்தை தடை செய்யாமல் விட்டோம்: ராஜபக்சே அரசு கொக்கரிப்பு


இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து நடிகர் விஜய் நாகப்பட்டினத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினார்.அப்போது இலங்கை அரசை கடுமையாக எச்சரித்தார்.இதையடுத்து அவர் நடித்து வெளிவந்துள்ள காவலன் படத்தை இலங்கையில் திரையிடவிடாமல் தடை செய்ய முயன்றதாகவும்,  அப்படத்தில் அசின் நடித்துள்ளதால் தடை செய்யாமல் விட்டதாகவும் தகவல் வந்துள்ளது.இது தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ளதாக வந்துள்ள  செய்திக்குறிப்பில், தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் கடந்த வாரம் நாகபட்டினம் பகுதியில் நடத்திய கூட்டத்தில் இலங்கை அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டால் இலங்கையை உலக வரைபடத்தில் இருந்து அகற்றுவோம் என அவர் தெரிவித்தது இலங்கை அரசை கடும் சினமடைய வைத்துள்ளது. 

உடனடியாகவே விஜய் நடித்த காவலன் படத்தை இலங்கையில் தடை செய்யுமாறு இலங்கை பாதுகாப்பு அமைச்சு, அரசு அதிகாரிகளை பணித்திருந்தது. ஆனால் விஜய் படத்தை தடை செய்வதற்கு முன்னர், நாம் அதில் நடித்த கேரளா நடிகை அசின் தொடர்பில் கவனம் செலுத்தினோம். அசின் இலங்கை அரசுக்கு நெருக்கமானவர். பல எதிர்ப்புக்களின் மத்தியில் இலங்கைக்கு பயணம் செய்த அசின் தென்னிந்தியாவில் ஏற்பட்ட எதிர்ப்புக்களை மிகவும் சிறப்பாக முறியடித்திருந்தார். 

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment