Friday, March 4, 2011
விஜய் வந்ததும் கேக் வெட்டிக் கொண்டாட்டம்
ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்கும் நண்பன் படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. ஆல்ரெடி படத்தின் முதல் கட்டப் படபிடிப்பை ஊட்டியில் முடித்துவிட்டார் ஷங்கர். விஜய் இல்லாத காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டது. இரண்டாவது கட்டப் படபிடிப்பு தேஹ்ராடடூனில் தொடங்கி உள்ளது.
வேலாயுதம் படத்தின் ஷுட்டிங்கை நிறுத்திவிட்டு நண்பன் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துக் கொண்டார் விஜய். விஜய் வந்த நாளே செட்டில் செம பார்ட்டியாம், ஏனென்றால் அன்றுதான் படத்தில் நடிக்கும் இன்னொரு நாயகன் ஸ்ரீகாந்துக்கு பிறந்தநாளாம். விஜய், ஜீவா, ஷங்கர் எல்லோரும் ஸ்ரீகாந்தை ஆர்ச்சரியப்படுத்தும் வகையில் கேக்வெட்டி கொண்டாடி உள்ளனர்.
தேஹ்ராடூனில் ஒரு கல்லூரியில் படபிடிப்பு நடந்து வருகிறது. இதில் படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்கி வருகிறார் ஷங்கர். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உட்பட நாயகி இலியானா, இலியானாவின் சகோதரியாக வரும் இன்னொரு நாயகி அனுயா, படத்தில் முக்கிய காத்தாப் பாத்திரத்தில் நடிக்கும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் என ஸ்டார் கொண்டாட்டத்தை நடத்தி வருகிறார் ஷங்கர். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் நான்கு பாடல்கள் மெட்டமைக்கப் பட்டுவிட்டதாம். கம்போசிங் வேலைகளை லண்டனில் முடித்து விட்டு சென்னை திரும்பியிருக்கிறார் ஹாரிஸ். இந்தி ’3 இடியட்ஸ்’சில் ’ஆள் இஸ் வேல்’ என்ற பாடல் ரொம்ப பிரபலம். அந்தப் பாடலை அப்படியே வைத்துக் கொள்ளலாம் என ஷங்கர் முடிவு செய்தார்.
ஆனால் எல்லா பாடல்களுமே புதுசாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஹாரிஸும் ஷங்கரும் பேசி முடிவெடுத்தார்களாம். ஹாரிஸின் மெலோடிக்கு நான் ரசிகன் என்று அடிக்கடி மேடைகளில் சொல்லும் விஜய் அவரின் இசையில் நடிப்பது இதுவே முதல் முறை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment