Wednesday, March 2, 2011
“பகலவன்” படம் வெளிவந்த உடன் விஜயின் இமேஜ் பலமடங்கு உயரும்
ஜோசப் விஜய் சந்திரசேகர் எனப்படும் விஜய் தனது 50-வது படத்தை கடந்து “வேலாயுதம்”, “நண்பன்” போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் செய்யக்கூடிய படமாக “பகலவன்” இருக்கலாம் என சொல்லப் படுகிறது. சீமான் தான் இந்த “பகலவன்” படத்தை இயக்கபோகிறார்.விஜய், சமீரா ரெட்டி, பிரபு, மற்றும் விவேக் இதில் நடிக்க போகிறார்கள்.“பகலவன்” என்ன மாதிரி படம்? இது மிகவும் புரட்சிகரமான படமாக இருக்கும். சீமான் தனது தரப்பில் அனைத்து ஆக்கபூர்வமான பணிகளையும் முடித்துவிட்டார். அதை விஜயிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து, விஜய் உற்சாகமிகுதியில் இருக்கிறார். இதில் நிறைய அனல் பறக்கும் வசனங்கள் இருக்கிறது. இந்த படத்தை உடனே துவக்குமாறு சீமானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் விஜய். “பகலவன்” படம் வெளிவந்த உடன் விஜயின் இமேஜ் பலமடங்கு உயரும் என்கிற அளவுக்கு, வசனங்கள் உள்ளது.
ஆனால் இந்த படத்தை துவக்குவதில், தயாரிப்பு தரப்பிலிருந்து இன்னும் தெளிவான முடிவுகள் எடுக்கப்படவில்லை. இதனை கலைப்புலி எஸ்.தாணு அவருடைய பேனரில் தயரிக்கபோவதாகவும், அதெற்கென சீமானிடம் கொஞ்சம் அட்வான்ஸ் கூட கொடுத்துவிட்டதாக செய்திகள் வந்தன. இதன்பின்னரும், இந்த படத்தை துவக்குவதற்கான தாமதத்தின் காரணம்? ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்த படி, விஜய் தனது அடுத்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நடித்து தரவேண்டும். தயாரிப்பு தரப்பில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பங்கள் விரைவில் தீர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில தேர்தல் முடிந்த உடன், இந்த படத்தினை துவக்க சீமானும், விஜயும் ஆர்வமாக உள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment