Sunday, February 20, 2011
விஜய் பற்றி செய்திகள் கோடம்ப்பாக்கத்தில் மேலும் HIT
விஜய் பற்றி செய்திகள் கோடம்ப்பாக்கத்தில் மேலும் சூடு பிடித்திருக்கின்றன
மணிரத்தினம்- சன் பிக்ஸர் கூட்டுத்தயாரிப்பாக பலநூறு கோடியில் கல்கியின் பொன்னியின் செல்வன் திரைவடிவம் பெற இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் இதுபற்றி மணிரத்தினம் அலுவலகத்தில் விசாரித்தால்,
தற்போது இது ஸ்கிரிப்ட் என்ற கட்டத்தில்தான் இருக்கிறது எழுத்தாளர் ஜெயமோகனுடன் இணைந்து ஸ்கிரிப்டை இறுதிபடுத்தி வரும் மணி ரத்தினம்,
திரைவடிவத்துக்காக நாவலின் சம்பவங்களில் எதை எடுப்பது எதை விடுப்பது என்று ஆலோசித்து வருகிறாராம். இந்தப்படத்தில் விகரம் மட்டுமே தற்போது நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் கிடைக்கிறது.
மேலும் வந்தியத்தேவனாக விஜய் நடிக்க இருக்கிறார் என்று வெளியாகும் தகவல்கள் பற்றி இப்போதைக்கு மனி அலுவலகத்தில் வாயைத்திறக்க மறுக்கிறார்கள்.
இதற்கிடையில் தற்போது பொள்ளாச்சி பகுதியில் வேலாயுதம் படப்பிடிப்பில் நடித்து வரும் விஜய் நேற்று முந்தினம் பொள்ளாச்சி நகரில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து காவலன் படம் பார்க்க வந்திருக்கிறார்.
இதை அறிந்த அதிமுக மாவட்டச் செயலாளர் திரளான அதிமுக தொண்டர்களுடன் தியேட்டர் வாசலில் கூடி பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்பு கொடுத்ததோடு “ அம்மாவின் அன்புத் தளபதி விஜய் வாழ்க” என்று கோஷம் போட்டு கலங்கடித்து இருக்கிறார்கள்.
இதை எதிர்பார்க்காத விஜய், படம் முடிந்ததும் தியேட்டரில் இருந்து போலீஸ் பாதுக்காப்புடன் வேறு வழியாக வெளியேறி விட்டாராம்.! பெரிய ஆச்சர்யம்! இந்த தியேட்டருக்கு வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையில் வந்திருக்கிறார் விஜய்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment