Saturday, February 26, 2011
நடிகர் விஜய் அதிமுக கூட்டணியில் - தேர்தலில் சந்திரசேகர் போட்டியிடலாம்
அதிமுக கூட்டணியின் அடுத்த அதிரடியாக, கூட்டணியில் விஜய்யின் மக்கள் இயக்கமும் இணைந்து கொள்வதாக இருக்கலாம் எனத் தமிழக அரசியல் வட்டாரத் தகவல்கள்
சில தெரிவிக்கின்றன. அரசியலில் இணைவது நடிகர் விஜயின் எண்ணமாக இல்லாதிருப்பினும். தந்தை சந்திரசேகருக்கு மகனை அரசியலுக்குள் கொண்டு வரும் எண்ணம் மிகத் தீவிரமாக இருந்ததாகச் சொல்கின்றார்கள்.
நடிகர் விஜய் ரசிகர் மன்றம் இதன் காரணமாகவே, மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது என்றும் கூறுகின்றார்கள். இதனை மோப்பம் பிடித்தக் கொண்டதனால்தான் திமுக தரப்பிலிருந்து விஜய் படங்கள் மீது கடுமையான ஆழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக முன்னர் சில தகவல்கள் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவைச் சந்திர சேகர் இரு தடவைகள் சந்திதுப் பேசியதும், அதன் தொடர்ச்சியாக அன்மையில் நாகையில் மீனவர் படுகொலைக்கான கண்டனக் கூட்டத்தை விஜய் மக்கள் இயக்கம் ஒழுங்க செய்ததும், இந்த அரசியற் பிரவேசத்தின் முக்கிய நகர்வுகள் என்கிறார்கள்.
இம்மறை தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் போட்டியிட்டாலும், விஜய் நேரடியாக அரசியலில் இறங்கமாட்டார் எனவும், ஆயினும் விஜயின் தந்தை சந்திரசேகரன் தேர்தலில் நிற்கக் கூடும் எனவும், எதிர்பார்க்கப்படுவதாகவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் பிரச்சார மேடைகளில் விஜய் தோன்றி அதிமுகவிற்காக வாக்கக் கேட்கலாம் என எதிர்பார்க்கபடுகின்றது.
இவை குறித்த விபரங்கள் நம்பத் தகுந்த வட்டாரத் தகவல்களாக இருப்பினம், ஊகங்களாகவே உள்ளதாகவும், ஆயினும் இவை உண்மையாக இருக்குமாயின் இன்னும் சில தினங்களில் இது தொடர்பானா அறிவிப்புக்கள் வெளிவரலாம் எனவும், அது அதிமுக கூட்டணியின் அடுத்த அதிரடியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment