Tuesday, February 22, 2011
மீனவர்கள் மீது தாக்குதல் நாகையில் நடிகர் விஜய் இன்று ஆர்ப்பாட்டம்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதை கண்டித்து நாகப்பட்டினத்தில் நடிகர் விஜய் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
இதுபற்றி நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொல்வதும், சிறைப்பிடித்து சென்று சித்ரவதை செய்வதும் அவர்களின் தொழில் உபகரணங்களை பறிப்பதும் அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது.
அவர்களின் வேதனையை நம் வேதனையாக உணர்ந்து, அவர்களுக்காக குரல் கொடுக்க நினைத்தேன். அதற்காக, இன்று மாலை, 4 மணியளவில் நாகப்பட்டினம் காடம்பாடி வி.டி.பி கல்லூரி மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. உலகின் கவனத்தை மீனவ சமுதாயம் மீது திசை திருப்ப, ஒவ்வொருவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தாங்குகிறார். பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள், நிதியுதவி வழங்கி விஜய் பேசுகிறார்.
நன்றி : தினகரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment