Monday, February 21, 2011
நாளை விஜய் ஆர்ப்பாட்டம்: அதிமுக ஆதரவு!
தமிழக அரசியலில் இது மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் விஜய் ரசிகர் மன்றங்கள் மற்றும் ஆதரவாளர்களின் வாக்குகள் அதிமுகவுக்கு சாதகமாக மாறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.அரசியலில் ஈடுபடத் துடிக்கும் விஜய்யின் முதல் அரசியல் நிகழ்வு நாளை நடக்கும் ஆர்ப்பாட்டம்தான். இதில் பல லட்சம் ரசிகர்களைக் கூட்டி, தனது பலத்தையும் காட்ட விரும்புகிறார். ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்தப் போகிறவரும் விஜய்தான்.
இந்த ஆர்ப்பாட்டம், விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன், ரசிகர் மன்ற செயலாளர் ரவிராஜா ஆகியோர் முன்னிலையில் தீவிரமாக நடந்து வருகிறது.
விஜய்யின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுகவின் முழு ஆதரவு தேவை என்று எஸ் ஏ சந்திரசேகரன் ஜெயலலிதாவிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார். ஆனால் தங்கள் ஆதரவு குறித்து ஜெயலலிதா வெளிப்படையாக அறிக்கை ஏதும் தரவில்லை. அதே நேரம், திரளான அதிமுக தொண்டர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
மாவட்ட அளவில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கத் தயாராகி வருகிறார்கள்.
Thanks : OneIndia
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment