Friday, February 25, 2011
ரஜினி பாணியில் விஜய் தேர்தல் நேர வாய்ஸ்

என் பிள்ளைகளுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி கொடுக்கிற பட்சத்தில் தன் தொண்டர்களுக்காக விஜய் குரல் கொடுப்பார் என்பதும் எஸ்.ஏ.சியின் மிக முக்கியமான ஸ்டேட்மென்ட்டாக இருக்கிறது. அப்படியென்றால் ரஜினியை போல தேர்தல் நேரத்தில் விஜய் 'வாய்ஸ்'கொடுப்பாரோ?
பிரபல வார இதழ் எழுப்பியிருக்கும் சந்தேகத்திற்கு பின் வருமாறு பதில் சொல்லியிருக்கிறார் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி. "விஜய் ரசிகர்களுக்கு, என் பிள்ளைகளுக்கு உரிய அங்கீகாரத்தை யாராவது அளித்தால், அவர்களுக்கு விஜய்யின் அதரவு இருக்கும். அங்கீகாரம் கிடைக்கும் போது அந்த ரசிகர்களுக்காக அவர்களது வெற்றிக்காக ஆதரவு கொடுக்கும் கட்சிக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும். தனது தொண்டர்கள் ஜெயிக்க வேண்டும் என்று தலைவன் ஆசைப்படுவதில் தவறில்லையே!
Thanks : vizhiyepesu
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment