Sunday, February 20, 2011
வந்தியத்தேவனாக விஜய்.........
கடந்த பத்து நாட்களுக்கு முன்பே நம் காதுகளை எட்டிய தகவல்தான் என்றாலும் இது புரளியாகவும் இருக்கலாம் என்று மணிரத்திரனம் அலுவலகமான மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரங்கள் சொல்லட்டும் என்று காத்திருந்தோம். இப்போது மிகவும் நம்பிக்கையான மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரத்தில் இருந்து நமக்குக் கிடைத்திருக்கும் தகவல் அந்த வதந்தியை உறுதி செய்கிறது. ஆமாம்! மணிரத்தினம் சன் பிக்சர்ஸ் நிதி உதவியுடன் இயக்க இருக்கும் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புனைவு திரைப்படத்தில், அந்த நாவலின் முதன்மைக் காதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவனாக இளைய தளபதி விஜய் நடிப்பது 90% உறுதியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். விஜய்க்கு பொன்னியின் செல்வன் பற்றி எதுவும் தெரியாது என்பதால் அவரது அப்பா எஸ்.ஏ.சி மூலம் பொன்னியின் செல்வன் கதை சொல்லப்பட்டுள்ளது என்றும், இதற்கு எஸ்.ஏ.சியின் முன்னாள் உதவியாளர்களில் ஒருவரான வருண் என்பவர் மிகவும் உதவியதாகவும் தெரியவருகிறது.
விஜய்க்கு வந்தியத்தேவன் என்றால் நாவலின் தலைப்பான பொன்னியின் செல்வனாக அதாவது ராஜாராஜ சோழனாக சியான் விகரம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். ராவணன் படத்தில் நடிக்கும் போதே அவருக்கு பொன்னியின் செல்வன் ஆங்கில மொழி பெயர்ப்பு நாவலை படிக்கக் கொடுத்து இதிலில் உள்ள நான்கு முக்கிய காதாபாத்திரங்களில் உனக்கு எது வேண்டுமோ நீயே தேர்வு செய்து கொள் என்றாராம் மணி. இப்படி விக்ரமே தேர்வுசெய்த கதாபாத்திரம்தான் ராஜராஜன் என்கிறார்கள். அதேபோல விஷாலும் ஒரு பாத்திரத்தில் நடிப்பார் என்கிறார்கள். தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு உத்தமச்சோழனாக (மதுராந்தகத் தேவர்) நடிக்க இருக்கிறார் என்று தகவல் கிடைக்கிறது.
இந்தப் பட்டியல் நம்பகமான வட்டத்திலிருந்து கிடைத்தாலும், அதிகாரபூர்வமாக உறுதி செய்ய்யும் வரை காத்திருந்துதான் ஆக வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment