Wednesday, March 23, 2011
நண்பன் படப்பிடிப்பில் விஜய் கோபம்
நண்பன் படப்பிடிப்பு டெல்லி அருகே நடந்து வருகிறது.கல்லுாரிக்குள் நடக்கிற எல்லா காட்சிகளையும் எடுத்து முடித்துவிட்டார் ஷங்கர். இனி எடுக்க வேண்டியதெல்லாம் அவுட்டோர் காட்சிகள்தானாம்.இதற்கிடையில் கடந்த வார ஷீட்டிங்கில் சரியான டென்ஷனை சந்தித்தார்கள் ஷங்கரும், விஜய்யும், ஜீவாவும். ஏன் ஸ்ரீகாந்த்தை விட்டு விட்டீர்கள் என்று யாரும் நினைவுபடுத்த வேண்டாம்.ஏனென்றால் டென்ஷனே அவரால்தானாம். ஒரு பாடல் காட்சியில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் ஆட வேண்டும். மற்ற இருவரும் மிக சரியாக செய்து முடித்துவிட்டார்கள். ஆனால் ஸ்ரீகாந்த் மட்டும் டேக் மேல் டேக் வாங்கியிருக்கிறார்.ஒவ்வொரு முறையும் சரியாக செய்த விஜய் மீண்டும் மீண்டும் ஆட வேண்டிய எரிச்சலில் லேசாக கடிந்து கொண்டாராம் ஸ்ரீகாந்த்தை.இதுக்காகதான் அப்பவே சொன்னேன் என்று ஜீவாவும் கோபப்பட்டதாக கூறுகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment