Sunday, March 20, 2011
விஜய் படத்தில் தமன் S மியூசிக்
பெரியநடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கவே பெரிதும் விரும்புவார்கள் இசையமைப்பாளர்கள்.அந்த வாய்ப்பு தமனுக்கு சீக்கிரமாகவே அமைந்திருக்கிறது.ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் ஐந்துபேரில் ஒருவராக நடித்த தமன், இப்போது இசையமைப்பாளராக இருக்கிறார். பல படங்களில் அவர் இசையமைத்தும் இன்னும் அவருக்குச் சரியான அடையாளம் கிடைக்கவில்லை.இப்போது அவருடைய குறையைப் போக்கும் வண்ணம் விஜய் நடிக்கும் படமொன்றிற்கு அவர் இசையமைக்கவிருக்கிறார். விஜய் இப்போது வேலாயுதம் படத்தை முடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதற்குப் பிறகு சூப்பர்குட்பிலிம்ஸ் சௌத்ரி தயாரிப்பில் ஷங்கருடைய உதவியாளர் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அந்தப் படத்துக்குத்தான் இசையமைப்பாளராக தமனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.இயக்குநரும் தயாரிப்பாளரும் இதை முடிவு செய்து விஜய்யிடமும் கேட்டிருக்கிறார்கள். அவரும் தமன் இசைக்குச் சம்மதம் சொல்லிவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment