Thursday, March 3, 2011
மணிரத்னம் இயக்கத்தில் விஜய், விக்ரம், மகேஷ்பாபு
மணிரத்னம் இயக்கும் படம் மூலம் தமிழுக்கு வருகிறார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. விக்ரம், விஜய் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குகிறார் மணிரத்னம். இதில் இன்னொரு ஹீரோவாக விஷால் நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. இப்போது அவருக்கு பதில் தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபுவை மணிரத்னம் ஒப்பந்தம் செய்துள்ளார். இது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்ட கதை என்று கூறப்படுகிறது. இதுபற்றி டிவிட்டர் இணையதளத்தில் மகேஷ்பாபு, ‘மணிரத்னத்தை சந்தித்தேன். எனது கனவு இப்போது நிறைவேறியுள்ளது. அவரது இயக்கத்தில் நடிக்க இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இந்தப் படம் மூலம் மகேஷ்பாபு தமிழில் அறிமுகமாகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
hi good team enaku vijay magesh babu rendu peraiyum romba pidikum
ReplyDelete