பொன்னியின் செல்வனில் விஜயுடன் மகேஷ் பாபு
விஜய்-விக்ரம்-விஷால் ஆகிய மூன்று நாயகர்களை வைத்து மணிரத்னம் இயக்கும்"பொன்னியின் செல்வன்" படத்தில் நான்காவது நாயகனாக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.ராவணன் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் அடுத்தபடம் "பொன்னியின் செல்வன்". கல்வியின் நாவலை மையமாக வைத்து உருவாக்கும் இந்தபடத்தில் நடிக்க விஜய்-விக்ரம்-விஷால் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். மிகுந்த பொருட்ச் செலவில் தயாராகும் இப்படத்தில் இன்னொரு நாயகரும் இணைந்து இருக்கிறார். தெலுங்கு விஜய் என்று வர்ணிக்கப்படும் மகேஷ் பாபும், இந்தபடத்தில் நடிக்க இருக்கிறார். இதை அவரே தன்னுடைய டிவிட்டர் வலைதளத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து டிவிட்டரில் மகேஷ்பாபு கூறியதாவது, எல்லா நடிகர்களை போல் எனக்கும் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. நீண்டநாளாக நிறைவேறாமால் இருந்த இந்த கனவு இப்போது தான் நிறைவேறி இருக்கிறது. இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE
No comments:
Post a Comment