Pages

Thursday, March 3, 2011

விஜய் கையில் தொற்றிக்கொண்டிருக்கும் குண்டுப் புத்தகம்


மணிரத்னம் இயக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஜெயமோகன் திரைக்கதை வசனம் எழுதுகிறார் என்ற செய்தி 100% உண்மை.காரணம் தனது சக எழுத்தாளர்களிடம் இதை உண்மை என்று ஒப்புக்கொண்டிருக்கிறார் அவர். ஆனால் அந்தப் படத்தில் விக்ரம் நடிக்கிறார்.
விஷால் நடிக்கிறார், விஜய்யும் நடிக்கிறார், மகேஷ்பாபுவை ஒப்பந்தமே செய்து விட்டார் மணிரத்தினம் என்று மெட்ராஸ் டாக்க்கீஸ் வட்டாரங்கள் சொன்னாலும் அதிகார பூர்வ அறிவிப்பு எப்போ வெளிவரும் என்று டென்ஷனாக இருக்கிறது மீடியா.இதில் யோசிக்க வேண்டிய விஷயம்,  விஷால் தொடர்ந்து மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். விஜய்யும் வேலாயுதம் படத்துக்கு பிறகு பகலவனை தொடங்கப் போகிறார் , அதன் பிறகு களவாணி பட இயக்குனர் களஞ்சியம் இயக்கத்தில் போலீஸ் கமிஷனாராக நடிக்க இருக்கிறார் என்கிறார்கள்.நிலைமை இப்படியிருக்க, எப்படி முடியும் இவர்களால் என்றொரு கேள்வியும் எழுந்திருக்கிறது. ஆனால் அதில் உண்மையும் இருக்கக் கூடும் என்று குழப்புகிறது இன்னொரு தகவல். கடந்த சில தினங்களாக பொன்னியின் செல்வன் நாவலை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருக்கிறாராம் விஜய். 
பைண்டிங் செய்யப்பட்ட பொன்னியின் செல்வன் புத்தகத்தை கையில் வைத்து படித்துகொண்டிருக்கிறாராம். மதிய உணவு இடைவேளையில் வழக்கமாக குட்டி தூக்கம் போடும் விஜய், அந்த நேரத்தைக் கூட தியாகம் செய்து விட்டு காரவேனில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருக்கிறாராம்.ஆரம்பத்தில் இவர் ஏதோ அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றைதான் படித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தார்களாம் நண்பன் பட யூனிட்டில். 
அப்புறம்தான் அது பொன்னியின் செல்வன் என்பதே தெரிய வந்திருக்கிறது. போகிற போக்கில் பொன்னியின் செல்வன் நாவலுக்கு மறுபடியும் நல்ல ஒரு சந்தை உருவாகியிருக்கிறது

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment