Wednesday, March 2, 2011
வேகமெடுக்கும் விஜய் படம்
வேலாயுதத்துக்குப் பிறகு பகலவன் படத்தில் நடிக்கிறார் விஜய். சீமான் சமீபத்தில் விஜய்யை சந்தித்து வசனத்துடன் கதையை சொன்ன பிறகு விஜய் முழுவதுமாக சரண்டராகிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.
பகலவன் பெயருக்கேற்ப ரௌத்திரத்தை வெளிப்படுத்தும் படம். முக்கியமாக வசனங்கள். சீமானின் மேடை முழக்கத்துக்கு இணையாக இருக்குமாம் வசனம் ஒவ்வொன்றும். ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்துவிட்டதால் படப்பிடிப்பை தொடங்க எந்தத் தடையும் இல்லை, ஒன்றேயொன்றை தவிர, தேர்தல்.
காங்கிரஸுக்கு எதிரான பிரச்சாரத்தை முடித்த பின் உடனடியாக படத்தை தொடங்குவது என முடிவு செய்துள்ளனர். படத்தை தயாரிப்பது தாணுவா, சூப்பர்குட் பிலிம்ஸா என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லையாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment