Wednesday, March 30, 2011
விஜய் சும்மா இருக்கமாட்டார்; தட்டிக்கேட்பார்: எஸ்.ஏ.சி
இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அதிமுகவுற்கு ஏன் ஆதரவு தெரிவிக்கிறேன். ஆளுங்கட்சியை ஏன் எதிர்க்கிறே என்பதற்கு விளக்கம் அளித்தார்.செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன், ’’கலைஞர் வசனம் எழுதிய மூன்று படங்களை நான் இயக்கியிருக்கிறேன். ஒரு படைப்பாளியாக நான் இன்றும் கலைஞருக்கு ரசிகனாக இருக்கிறேன். மற்றபடி நான் எந்த காலத்திலும் திமுககாரன் என்று சொல்லிக்கொண்டதில்லை.ஒரு குடும்பத்தில் தகப்பன் தவறு செய்துவிட்டால் மகன் தட்டிக்கேட்பது உண்டு. அந்த கோபத்தில்தான் நான் தட்டிக்கேட்கிறேன். ஆட்சி மாற்றம் வேண்டும் என்கிறேன். அதனால்தான் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்.புரட்சித்தலைவி ஆட்சிக்கு வர நானும், விஜய்யின் மக்கள் இயக்கத்தினரும் பாடுபடுவார்கள். நான் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்யவிருக்கிறேன்.’’சட்டப்படி குற்றம்’’ என்று படம் எடுத்திருக்கிறேன். இந்தப்படம் ஆளுங்கட்சியை தட்டிக்கேட்கும் விதத்திலும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் இருக்கும்படியாக எடுத்திருக்கிறேன்.மக்கள் இயக்கம் மக்களுக்காகத்தான். மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் தட்டிக்கேட்கும். மக்களுக்கு பிரச்சனை என்றால் விஜய்யும் சும்மா இருக்க மாட்டார்; தட்டிக்கேட்பார். அதனால்தான்.... மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அதனால்தான் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கிறேன். அதிமுக ஆட்சிக்கு வர பாடுபடுவோம்’’ என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment