Saturday, March 12, 2011
டாக்டர் விஜய்யில் இருந்து ஐ.பி.எஸ் விஜய் : பகலவன் படத்தின் கதை
சீமான் இயக்கும் பகலவன் படத்தில் ஐ.பி.எஸ் ஆபிசராக நடிக்கிறார் விஜய்.
விஜய் நடித்து கொண்டிருக்கும் வேலாயுதம், நண்பன் படத்தை அடுத்து நடிக்க இருக்கும் படம் பகலவன். சீமான் இயக்க, தாணு தயாரிக்க இருக்கிறார்.
டாக்டருக்கு படித்துவிட்டு, வெளிநாட்டில் வேலை கிடைத்தும் அதற்குப் போகாமல் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களுக்கு சேவை செய்யும் பாத்திரத்தில் நடிக்கிறார் விஜய். இங்கு உள்ள 20 கிராமங்களை தத்து எடுத்து மருத்துவ உதவி செய்து கொண்டிருக்கிறார்.
அந்த 20 கிராமங்களை நம்பி மருத்துவமனை நடத்துபவர்களால் விஜய்க்கு பிரச்னை வருகிறது. கிராமத்தில் உள்ள பெரியவர் ஒருவர் விஜய்யிடம் "அவங்கிட்ட எதுக்குபா உனக்கு வம்பு? பேசாம வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக்க பாருப்பா" என்கிறார்.
அதற்கு விஜய், வயலில் உள்ள நாற்றங்காலை காட்டி "இது என்ன ?" என்று கேட்கிறார்.
பெரியவர் "நாற்றங்கால்" என்கிறார்.
"இது எதற்கு பயன்படும் ?"
" இது தரும் விதைநெல்லை தான் வயல் முழுவதும் விதைப்போம் "
"சரி.. அப்படி என்றால் இந்த நிலம்.. ? "
" இது எப்பொழுதும் தரிசாவே தான் இருக்கும்" என்கிறார் பெரியவர்.
"அதைப் போல் தான் இப்ப நம்ம நாடே இருக்கு. எல்லாரும் இங்கே படிச்சுட்டு வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக்கிறாங்க.. நம்ம நாடு எப்பவும் தரிசாவே கிடக்கு!" என்கிறார்.
மேலும் அவரது மருத்துவ சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய்க்கு எதிராக மருத்துவமனை நடத்தும் ஒருவர் விபத்தில் சிக்கிக் கொள்கிறார். ஆபரேஷன் செய்வதில் கைதேர்த்தவரான விஜய்யின் உதவியை அவர்கள் நாடுகின்றனர். விஜய் அவருக்கு ஆபரேஷன் செய்து காப்பாற்றுகிறார். மனந்திருந்திய எதிர் அணிக்காரர், "எனது தேகம் கிழிஞ்ச உடனே தைச்சுட்ட.. இந்த தேசம் கிழிஞ்சு கிடக்கே... அதை எப்போ தைக்க போற..? " என்கிறார்.
உடனே ஐ.பி.எஸ் படித்து அரசாங்க அதிகாரியாக பணியாற்ற வருகிறார் விஜய். அதன்பின் அரசில் நடக்கும் அநியாயங்களை அரசாங்க அதிகாரியாக இருந்து எதிர்த்து போராடுகிறார். இதுதான் பகலவன் படத்தின் கதை.
தேர்தல் முடிந்தவுடன் இருவரும் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள் பகலவனுக்காக.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment