Saturday, March 12, 2011
விஜய் – இலியானாவின் ஆச்சரியம்
கேடி படத்தில் கடைகோடிக்கு போனதிலிருந்து இலியானாவுக்கு தமிழ் என்றால் பெரும் கசப்பு. இத்தனைக்கும் கேடிதான் அவர் அறிமுகமான படம். தெலுங்கில் முன்னணி நடிகையான பிறகு தமிழ் பக்கமே அவர் திரும்பிப் பார்க்கவில்லை. முன்னணி ஹீரோக்கள் அழைத்தும் கதவடைப்புதான் பதிலாக கிடைத்து வந்தது.
இந்த புறக்கணிப்புக்கு முடிவு கட்டியிருக்கிறது நண்பன். ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தில் இலியானா விஜய்யின் ஜோடி.
இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க ஆரம்பித்திருக்கிறார் ஷங்கர். அதன்பிறகு இலியானாவின் வாயிலிருந்து வருவதெல்லாம் விஜய் புகழ்தான். விஜய் இவ்வளவு இனிமையா, ஹியூமரா இருப்பார்னு நான் நினைக்கவேயில்லை. அவர்கூட வொர்க் பண்றது ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு… இதேபோல் இன்னும் நிறைய.
இலியானாவின் போக்கைப் பார்த்தால் விஜய்யின் அடுத்தப் படத்திலும் இடம்பிடிப்பார் போலிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment