Saturday, March 12, 2011
அதிமுக கூட்டணியில் விஜய் ? - யோசிக்கும் ஜெயலலிதா - தயங்கி நிற்கும் விஜய் !
அதிமுகவில் நடிகர் விஜய்க்கு 3 தொகுதி ஒதுக்கப்படலாம். அது இன்றோ நாளையோ இடம்பெறலாம் எனப்பரவலாக ஒரு செய்தி அடிபட்டு வருகிறது. அதிமுக தரப்பில் எந்தவொரு விடயமும் இலகுவில் வெளியே வருவதற்கு வாய்ப்பில்லை என்ற நிலையில், விஜய் தரப்பிடம் அனுகினால் அங்கும் பயங்கர அமைதி காக்கின்றார்கள்.ஆனாலும் தொடர்ச்சியாக எடுத்த முயற்சியில் கசிந்த தகவல்கள் சில. விஜய் மக்கள் இயக்கத்துக்கு 3 தொகுதிகளை ஒதுக்குவதன் மூலம் அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய விஜயை இழுக்கலாம் எனவும், அதன் மூலம் அவரது ரசிகர்களை அதிமகவுக்கு ஆதரவாகச் செயல்பட வைக்கலாம் எனவும் அதிமுக தரப்பு கணக்குப் போடுகிறது. ஆனாலும் விஜயை ஒரு அரசியல் சக்தியாக மாற்றிவிடும் வேலையை அது செய்ய விரும்பவில்லை.இந்நிலையில் ஏற்கனவே அதிமுக ஆதரவாளர்களாக உள்ள விஜய் ரசிகர்கள் இருவருக்கும், விஜயின் தந்தை சந்திரசேகருக்கும் ஒரு தொகுதி கொடுக்கப்படலாம் எனத் தெரிய வருகிறது. இதன் மூலம் விஜயை பெரிதும் முக்கியவப்படுத்தாமல், ஆதரவ என்ற வட்டத்துக்குள் வளைத்துவிட எண்ணுகிறது அதிமுக. இதேவேளை அதிமுகவுக்கு ஆதரவு என்பதில் விஜயின் தந்தை சந்திரசேகர் ஆர்வமாக இருந்தாலும், விஜய் அதிமுகவுக்கான ஆதரவு சரிவருமா என சற்று யோசிப்பதாகவும் சொல்கிறார்கள். அரசியலில் ஈடுபடுவதில் விஜய் ஆர்வம் காட்டி வந்த போதும், அதிமுகவின் வழியில் அதனைத் தொடங்கலாமா என்பதில் அவர் தயங்குவதாகவே தெரிகிறது.
ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம் எனும் நிலையில், இதுவெல்லாம் அடிபட்டும் போகலாம். எதுவாயினும் இன்னும் ஒரு சில தினங்களுக்குள் நிச்சயம் முடிவு தெரிந்துவிடும். இரு தரப்பு உடன்பாடு உள்ளதென்றால் இன்று அல்லது நாளை ஜெயலலிதாவை விஜய் சந்திக்கக் கூடும் என்கிறார்கள். இதே வேளை மற்றெர்ரு புறத்தில், வைகோவின் மதிமுக, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிமுகவில் இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில், அவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment