Tuesday, March 8, 2011
அதிமுக ஆதரவு போஸ்டர்: சேலத்தில் விஜய் ரசிகர்களிடயே மோதல்
சேலத்தில் அதிமுக ஆதரவு போஸ்டரால் விஜய் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.நடிகர் விஜய் கைகளில் அதிமுக சின்னம் பச்சை குத்தியிருப்பது போல் படம் வரைந்து நேற்று இரவு சேலம் நகரின் பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். இதை இன்னொரு தரப்பு ரசிகர்கள் எதிர்த்துள்ளனர். அவர்கள் இன்று காலை வேறொரு போஸ்டரை அடித்து அதன் மேல் ஒட்டியுள்ளனர்.இதனால் இரு தரப்பு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒவ்வொரு தரப்பும் தாங்கள்தான் உண்மையான விஜய் ரசிகர்கள் என்றும், ஒரு தரப்பு மற்ற தரப்பின் செயலை கண்டித்தும் கோஷம் போட்டனர். தேர்தல் நேரம் என்பதால், ரசிகர்களின் இந்தச் செயலால் சேலம் நகரில் இன்று காலை பரபரப்பு நிலவியது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment