Saturday, March 12, 2011
விஜய் சென்னைக்கு விரைந்த ரகசியம்!
கடந்த இரண்டு நாட்களாக சென்னையில்தான் இருக்கிறார் விஜய். டேராடூனில் நடந்து வரும் 'நண்பன்' படப்பிடிப்பிலிருந்து இவ்வளவு அவசரமாக சென்னைக்கு வர வேண்டிய அவசியம் என்ன என்று மண்டையை குடைந்து கொண்டிருக்கிறது விஷயமறிந்த வட்டாரம். இதற்கிடையில் 'சட்டப்படி குற்றம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை வருகிற 14ந் தேதி கமலா திரையரங்கத்தில் வைத்திருக்கிறார் எஸ்.ஏ.சி. ஆடியோ விழாவில் கலந்து கொள்ள 'அம்மாவை' அழைத்துக் கொண்டிருந்தாரே, என்னாச்சு? இந்த கேள்விக்கும் இன்றுதான் விடை கிடைத்தது. எஸ்.ஏ.சி எடுத்த தொடர் முயற்சிகள் செல்லுபடியாகவில்லையாம். இந்த தேர்தலில் விஜய் மாவட்டம் தோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்களாம் அதிமுக தரப்பில். இந்த விஷயத்தில் விஜய்க்கு ஒரு தயக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வேண்டுமென்றால் தேர்தலுக்கு முன்பு ஒரு அறிக்கை மட்டும் தருவதாக கூறினாராம். இந்த பேச்சு வார்த்தை திருப்தியாக அமையாமல் போனதும்கூட அம்மா ஆடியோ நிகழ்ச்சிக்கு வராததற்கு ஒரு காரணம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். 'ஜெ' வருவார் என்று நம்பியிருந்ததால் முன்னணி நடிகைகள் யாரையும் விழாவுக்கு அழைக்காமலிருந்தார்களாம். இப்போது கடைசி நேரத்தில் யாரையாவது அழைத்தாக வேண்டுமே? த்ரிஷா ஊரில் இல்லை. அதனால் அனுஷ்காவை வரச்சொல்லி கேட்டிருக்கிறார்களாம். 'ரெண்டு' என்ற படத்தின் மூலம்தான் தமிழில் முதலில் அறிமுகமானார் அனுஷ்கா. இப்படத்தை இயக்கியது எஸ்.ஏ.சி. அந்த உரிமையில்தான் இப்படி திடீர் அழைப்பு விடுத்தாராம் அவர். இந்த அழைப்பை ஏற்று வருகிற 14ந் தேதி கமலா தியேட்டரில் நடைபெறப் போகும் விழாவுக்கு வருவதாக உறுதியளித்திருக்கிறாராம் அனுஷ்கா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment