Pages

Thursday, March 10, 2011

பாடல் வெளியீட்டு விழாவில் ஜெ.


சட்டப்படி குற்றம் படத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான பல விஷயங்களை மிக தைரியமாக கூறியிருக்கிறாராம் எஸ்.ஏ.சி. அது மட்டுமல்ல,காவலனுக்கு பிரச்சனை ஏற்பட்ட சமயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையும் நேரில் சந்தித்து தனது மனக்குமுறல்களை கொட்டிவிட்டு வந்தார். இவ்வளவு வெளிப்படையாக இறங்கிவிட்ட பின்,பின்வாங்கினால் பொருத்தமாக இருக்காது அல்லவாஅதனால் இம்மாதம் நடைபெற இருக்கும் பாடல் வெளியீட்டு விழாவுக்கு முன்னாள் முதல்வர் ஜெ.வை அழைத்திருக்கிறாராம். இந்த வேண்டுகோளை பரிசீலனையில் வைத்திருக்கிறாராம் ஜெ.வும்.

ஒருவேளை அவர் வர ஒப்புக் கொண்டால் முதல் பாடல் பிரதியை ஜெ.வெளியிட விஜய்யும்டைரக்டர் ஷங்கரும் பெற்றுக் கொள்வார்கள் என்கிறது அந்த தகவல் வட்டாரம்! ஒரே மேடையில் ஜெ.வும் விஜய்யும் ஒரே மேடையில் இருக்கிற காட்சி. வரும் தேர்தலுக்கு பயன்பட்டால் இருதரப்புக்கும் சந்தோஷம்தானே!

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment