Saturday, March 12, 2011
பொன்னியின் செல்வன்: ஆர்யாவும் நடிக்கிறார்!
மணிரத்னம் இயக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் படத்தில் இப்போது ஆர்யாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.சமீபத்தில்தான் படத்துக்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவல் பொன்னியின் செல்வன். இந்தக் கதையை படமாக்க அமரர் எம்ஜிஆர் உள்பட பலர் முயன்றனர். ஆனால் நிறைவேறாமலேயே இருந்தது.
இந்த நிலையில், இப்போது மணிரத்னம் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்குகிறார். இதில் முன்னணி நடிகர்கள் விஜய், விக்ரம், விஷால், மகேஷ்பாபு போன்றோர் நடிப்பதாகக் கூறப்பட்டது.இதுவரை விஜய், மகேஷ்பாபு ஆகியோர் மட்டும் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். விக்ரம் நடிக்கும் பாத்திரத்தில் நான் நடிக்க தயார் என்று சூர்யா கூறியதால், அந்த வேடத்தில் யார் நடிப்பார்கள் என்பது இதுவரை உறுதியாகவில்லை.
விஷால் நடிக்கிறாரா இல்லையா என்பதும் உறுதியாகவில்லை. இந்த நிலையில், பொன்னியின் செல்வனில் புதிதாக நுழைந்திருக்கிறார் ஆர்யா.படத்தில் இவருக்கும் முக்கிய வேடம் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிக்க சில தினங்களுக்கு முன்பு தனது அலுவலகத்துக்கு ஆர்யாவை அழைத்திருந்தார் மணிரத்னம். கதையைக் கேட்ட உடனே சம்மதித்த ஆர்யா, ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment