Pages

Thursday, March 10, 2011

ஒரே மேடையில் ஜெயலலிதா - விஜய் - விஜயகாந்த்!


அதிமுகவின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இப்போது தனது மகன் விஜய்யையும்,  அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையும் ஒரே மேடையில் அமரவைக்க  ஏற்பாடு செய்துள்ளார்.தான் இயக்கிவரும் ‘’சட்டப்படி குற்றம்’’ படம் முடியும் தருவாயில் இருப்பதால் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார்.  இந்த விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.இந்த விழாவில் கலந்துகொண்டு பாடல் கேசட்டை வெளியிடுமாறு ஜெயலலிதாவை கேட்டுக்கொண்டுள்ளார். இப்படம் ஆளும்கட்சிக்கு எதிரான பல விவகாரங்களை தாங்கி வருவதாலும்,  தேர்தல் நேரம் என்பதாலும் ஜெயலலிதா இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

ஜெயலலிதா வெளியிட நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தையும் கேட்டுக்கொண்டுள்ளாராம்.இந்த விழாவிற்கு தமிழகம் முழவதிலும் உள்ள விஜய் ரசிகர்களை மட்டுமல்லாது புதுச்சேரி, கேரளா உள்பட பிற மாநிலங்களிலும் உள்ள விஜய் ரசிகர்களை திரட்ட திட்டமிட்டுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.மேலும்,  அதிமுக கூட்டணி கட்சி தொண்டர்களையும் திரட்டி மாநாடு போல் நடத்த திட்டமிட்டுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.   

இது தேர்தல் பிரச்சார மாநாடாக அமையும் என்பதால் ஜெயலலிதாவும் இந்த விழா மீது தனிக்கவனம் வைத்திருக்கிறாராம்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment