Wednesday, March 9, 2011
விஜய் பிரச்சாரம் செய்ய அதிமுக ஹெலிகாப்டர்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால், தி.மு.க.ஓட்டுகளைப் பிரித்துவிடுவார் என்பதால், அவருக்குப் பல வழிகளிலும் முட்டுக்கட்டை போட்ட, தி.மு.க.தரப்பு, விஜய்யின் ‘காவலன்’ படத்துக்கும் முட்டுக்கட்டை போட்டதாம். அதையெல்லாம் தாண்டி, ஜெ.வை சந்தித்தார் விஜய். அவருடைய ‘மக்கள் இயக்கத்’துக்கு அ.தி.மு.க.வில் 8 சீட்கள் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறாதாம். நாகை மீட்டிங் விஜய்க்கு புதுத் தெம்பு கொடுத்திருக்கிறதாம். மார்ச் 2வது வாரத்தில் பிரச்சாரம் துவங்கி, ஏப்ரல் 10 தேதிவரை 50 கூட்டங்கள் தமிழகம் முழுவதும் பரவலாக நடக்குமாம். விஜய் பிரச்சாரம் செய்ய, கிங் ஃபிஷர் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு அமர்த்தும் பணி துவங்கியுள்ளது.அ.தி.மு.க. கூட்டணியை ஆட்சியில் அமர்த்த பல கோடி ரூபாய் திட்டங்களை, விஜய், ரகசியமாக வகுத்துக் கொண்டிருக்கிறாராம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment