Pages

Saturday, March 12, 2011

ரூ.100 கோடியில் தயாராகும் சோழமன்னன் சரித்திரக்கதை; “பொன்னியின் செல்வன்”


ரூ.100 கோடியில் தயாராகும் சோழமன்னன் சரித்திரக்கதை;
 
“பொன்னியின் செல்வன்”
 
நாயகி அனுஷ்காகல்கி எழுதிய சோழ மன்னன் சரித்திரக்கதையான பொன்னியின் செல்வன், படமாகியது. தமிழ், தெலுங்கு மொழிகளில் மணிரத்னம் இப்படத்தை இயக்குகிறார். ரூ.100 கோடி மெகா பட்ஜெட்டில் தயாராகிறது.சஸ்பென்ஸ்- திரில்லர், திருப்பங்களுடன் கூடிய இக்கதையை படமாக்க வேண்டும் என்பது மனிரத்தினத்தின் நெடுநாள் கனவாக இருந்தது. அது தற்போது நனவாகிறது. இதில் கதாநாயகனாக விஜய், நடிக்கிறார்.வில்லவராயன் வந்தியத் தேவன் கேரக்டரில் அவர் வருகிறார்.
 
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, சோழமன்னன் ஆதித்த கரிகாலன் வேடத்தில் நடிக்கிறார். அருள்மொழி வர்மன் பாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார். இதில் கதாநாயகியாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.இப்படத்துக்காக நிறைய தேதிகளை ஒதுக்கியுள்ளார். கமலஹாசன் இதை படமாக்க சில வருடங்களுக்கு முன்பு முயன்றார். அது நடக்கவில்லை. தற்போது மனிரத்தினம் கைக்கு வந்துள்ளது.
 
எழுத்தாளர் ஜெயமோகன் உதவியுடன் இதனை திரைக்கதையாக மாற்றியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்குகிறது.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

1 comment: