Tuesday, March 15, 2011
என் தம்பி விஜய் தீவிரவாதி அல்ல; போராளி - சீமான் பேச்சு
நாம் தமிழர் கட்சியின் மாநிலத்தலைவர் சீமான் ‘’சட்டப்படி குற்றம்’’ என்ற திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார்.இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. படத்தின் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் பங்கேற்றனர்.சீமான் இவ்விழாவில், ’’சட்டப்படி குற்றம் என்று படம் எடுத்திருக்கிறீர்கள். அந்த குற்றத்திற்கு தீர்ப்பும் உங்களிடமே இருக்கிறது. அந்த தீர்ப்புதான் விஜய். எங்கெல்லாம் அக்கிரமங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் புரட்சி வெடிக்கவேண்டும். மக்களுக்கு புரட்சியை சொல்லித்தரவேண்டும். அப்படி புரட்சியை சொல்லித்தருகிறது இப்படம்.
தம்பி விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லாதீர்கள். அவர் வரவேண்டும். அவருக்கான அரசியலை அவர்தான் செய்யவேண்டும்.உலக வரைபடத்தில் இலங்கை என்ற நாடே இருக்காது என்று சிங்கள அரசுக்கு எதிராக விஜய் கோபப்பட்டார். என் தம்பி விஜய் ஏன் அப்படி கோபப்பட்டார். மண்ணையும்,மக்களையும் உயிருக்கு உயிராய் நேசிப்பவர்களுக்குத்தான் அப்படி கோபம் வரும். இப்படி பேசுவதால் தீவிரவாதி என்ற பட்டம் கட்டிவிடாதீர்கள். எப்போதும் போலவே இப்போதும் அப்படி செய்துவிடாதீர்கள்.
என் தம்பி விஜய் தீவிரவாதி அல்ல; தன் இனத்திற்காக குரல் கொடுக்க வந்திருக்கும், போராட வந்திருக்கும் போராளி. அமைதியாக இருந்த தம்பி இப்போதுதான் கோபப்பட்டிருக்கிறார். அந்த கோபத்தை குறைத்து விடாதீர்கள்’’ என்று பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment