Monday, March 14, 2011
விஜய் படத்தில் ஹாலிவுட் ஆக்ஸன்: ஜாக்கி சான் ஐடியா
விசாகபட்டினத்தில், ரயில் மேல் நடக்கும் பவர் புல்லான ஆக்ஸன் சீனை டாம் 'வேலாயுதம்' படத்திற்காக த்ரில்லாக எடுக்க போகிறார். வேலாயுதம் படத்தில் டைட்டில் நாயகனான விஜய் மிரட்டும் ஆக்ஸன் அதிரடியை அமைக்க ஆஸ்கார் ரவிசந்திரனுக்கு அவருடைய நண்பர் ஜாக்கி சான் கொடுத்த ஐடியாதான் இது.இந்த சண்டைக்காட்சியை படமாக்க விசாகப்பட்டினத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள் 'ப்ரீ-புரடக்சன்' வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்கள். இந்தியில் அபிஷேக் பச்சான் நடிப்பில் வெளியான 'துரோணா' படத்துக்கு டாம் தான் சண்டைகாட்சிகளை அமைத்தாராம்.'வேலாயுதம்' விஜய்-'ரத்த சரித்திரம்' படத்தில் நடித்த அபிமன்யுடன் முட்டி மோதுகிற காட்சியை பரபரப்பாக படமாக்க உள்ளார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment