Pages

Wednesday, March 16, 2011

பிரசாரத்துக்கு நோ; அறிக்கை மட்டும்தான்! விஜய் அதிரடி


Vijay`s political updateவரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக நடிகர் விஜய் பிரசாரம் செய்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் பிரசாரம் செய்ய மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிமுகவுக்கு ஆதரவாக ஒ‌ரேயொரு அறிக்கையை மட்டும் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறது அந்த தகவல். காவலன் படம் ரீலிஸ் செய்வது தொடர்பாக எழுந்த பிரச்னைகளை சமாளிக்க விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் உதவியை நாடினார். அப்போது முதல் விஜய் மீது அதிமுக முத்திரை குத்தப்பட்டு வருகிறது. விஜய்யும் தன் பங்குங்கு, ஆளும்கட்சியினர் காவலன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்காரர்களை மிரட்டுகிறார்கள்; காவலன் பேனர் வைக்க போலீசார் வேண்டுமென்றே தடை விதிக்கின்றனர் என்றெல்லாம் ஆளும்கட்சி மீது குற்றம்சாட்டினார்.
இதனால் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போகிறார் என்று செய்திகள் வெளியாயின. ஆனால் இதுபற்றி விஜய்யோ, அவரது தந்தை எஸ்.ஏ.சி.யோ எந்தவிதமான தகவலையும் தெரிவிக்காத நிலையில், அதிமுகவில் விஜய்க்கு 3 சீட்டுகள் ஒதுக்கப்படவிருப்பதாகவும், எஸ்.ஏ.சி., புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடப்போவதாகவும் கூறப்பட்டது. இதுபற்றி எஸ்.ஏ.சி.,யிடம் கேட்டால், மழுப்பலான பதிலையே தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில் விஜய் தேர்தல் பிரசாரம் செய்யப்போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் வெளிநாட்டில் நடைபெறும் சூட்டிங்கிற்கு கிளம்பும் திட்டத்தில் இருக்கும் விஜய், தனது ரசிகர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது குறித்து ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட முடிவு செய்திருக்கிறாராம். அந்த அறிக்கையாவது சூட்டை கிளப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment