Wednesday, March 16, 2011
திகைக்க வைக்கும் தெலுங்கு ஹீரோக்கள்
தெலுங்கில் படம் இயக்கவும், நடிக்கவும் நம்மாட்கள் ஆசைப்படுவதற்கு காரணம் இருக்கிறது. இந்தியாவிலேயே இங்குதான் சம்பளம் அதிகம்.தெலுங்கில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்து முதலிடத்தில் இருக்கிறார் ஜுனியர் என்டிஆர். இவரது சம்பளம் முந்தைய படம் வரை ஏழு கோடி. இப்போது ஒன்பது கோடிகள். இவருக்கு அடுத்த இடத்தில் ரவி தேஜா. ஏழு கோடிகள் வாங்குகிறார். மகேஷ்பாபுவின் படங்கள் தொடர்ந்து சரியாகப் போகாததால் ஆறு கோடிக்கு சம்பளம் கீழிறங்கியுள்ளது.தென்னிந்தியாவைப் பொறுத்தவரை ரஜினி, கமல், விஜய்க்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் ஜுனியர் என்டிஆர். அல்லு அர்ஜுன் போன்ற சுமாரான ரசிகர்கள் உள்ள ஹீரோக்களே தெலுங்கில் ஐந்து கோடி சம்பளம் வாங்குவது மற்ற மொழி நடிகர்களுக்கு பொறாமை வரவைக்கும் செய்தி.மம்முட்டியும் மோகன்லாலும் இப்போதும் ஒன்றரை கோடியை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment