Pages

Saturday, March 19, 2011

விஜய்க்கு குஷ்புவின் அட்வைஸ்


நடிகை குஷ்புவிடம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி கருத்து கேட்கப்பட்டது.மக்கள் பணிகளில் ஈடுபட விரும்பும் யாரும் அரசியலில் ஈடுபடலாம். ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். சினிமாவில் நடிக்கும்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள். விசில் அடித்தும் ரசிப்பார்கள். அவர்கள் எல்லோருடைய ஓட்டும் நமக்குத்தான் விழும் என்று எதிர்பார்த்து அரசியலுக்கு வரக்கூடாது.சினிமாவை விட அரசியல் கஷ்டமான விஷயம். நடிகைகளில் ஜோதிகாவையும் நடிகர்களில் கார்த்திக்கையும் எனக்கு பிடிக்கும். அனுஷ்காவும் என்னை கவர்ந்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன். எதிர்க்கட்சி தலைவர்களை தாக்கி பேச மாட்டேன். குறிப்பாக சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக் போன்றோரை விமர்சிக்க மாட்டேன்.


நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பார் என்றும் சில மாதங்களுக்கு பிறகு தனிக்கட்சி துவங்கி முழு நேர அரசியலில் குதிப்பார் என்றும் கூறப்படுகிறது. விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று பேசி வருகிறார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி உள்ளார்.விஜய் அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன என்று நடிகை குஷ்புவிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 "மக்கள் பணிகளில் ஈடுபட விரும்பும் யாரும் அரசியலில் ஈடுபடலாம். விஜய்யும் தாராளமாக வரலாம்.ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். சினிமாவில் நடிக்கும்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள். விசில் அடித்தும் ரசிப்பார்கள். அவர்கள் எல்லோருடைய ஓட்டும் நமக்குத்தான் விழும் என்று எதிர்பார்த்து அரசியலுக்கு வரக்கூடாது. சினிமாவை விட அரசியல் உண்மையிலேயே கஷ்டமான விஷயம்தான்...", என்றார்.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment