Pages

Monday, February 14, 2011

வந்தியத் தேவனாக விஜய்!


Mani Ratnam and Vijayபொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்குகிறார் என்பது நூறு சதவீதம் உறுதியான விஷயமாகிவிட்டது. 
இந்தப் படத்தின் நாயகர்கள் யார் யார் என்பதே படிப்பவர்கள், கேட்பவர்கள் ஆவலைத் தூண்டுவதாக உள்ளது.

விஜய்தான் படத்தின் ஹீரோ. பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட வந்தியத் தேவன் பாத்திரத்தில் வருகிறார் அவர்.

மற்ற முக்கிய வேடங்களில் விக்ரம், விஷால் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கிறார்கள். மகேஷ்பாபு நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தில் நாயகர்களுக்கு இணையாக நாயகிகளுக்கும் பங்குள்ளது. எனவே பொருத்தமான நடிகைகளுக்கு தேர்வு நடந்து வருகிறது.

படத்துக்கான திரைக்கதை அமைப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. 

படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என முதலில் செய்திகள் வந்தன. இப்போது, பிக் பிக்சர்ஸ் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள்.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment