Wednesday, February 16, 2011
சிறுத்தையை துரத்தியது காவலன்
...என்பதைப் பார்த்து அதிரடியாக தனது அரசியல் எண்ட்ரியை தொடங்க இருக்கிறார் விஜய் என்று நம்பகமான தகவல் கிடைக்கிறது. அதிமுகவுக்கு சாதகமான அலை இருக்கும் பட்சத்தில் அதிமுகவுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதன் மூலம் தனது நிஜ அரசியல் எண்ட்ரியை தொடங்குவார் என்கிறது அந்த நம்பகமான செய்தி. பிப்ரவரியில் திருச்சியில் நடைபெற இருந்த விஜய் ரசிகர் மன்ற மாநாட்டை கேன்சல் செய்து விட்ட ஏமாற்றத்தில் இருக்கும் ரசிகர்களை சுற்றுப்பயனம் மூலம் சந்திக்க இருந்த விஜய், அதையும் தற்போது ரத்து செய்து விட்டாராம். காரணம் தேவையில்லாமல் இப்போது அலைய வேண்டாம். பிரச்சாரம் சூடு பிடிக்கும் சமயத்தில் அதிமுக ஆதரவு பயணமாக அதை வைத்துக் கொள்ளுங்கள். என்று கூறிவிட்டார்களாம் அதிமுக தலைமை தரப்பில். இதனால் செம உற்சாகத்தில் இருக்கிறது விஜய் மன்ற வட்டாரம். இது ஒருபுறம் இருக்க... பொங்கல் ரிலீஸில் பாக்ஸ் ஆபீஸில் வசூல் அள்ளிக் கொண்டிருப்பது சிறுத்தையா இல்லை காவலனா என்று அறிவிக்க கணக்கு வழக்கு பார்த்த்தில் சிறுத்தையை பின்னுக்கு தள்ளிவிட்டாரம் காவலன். இதுவரை 21 கோடி வசூல் செய்திருக்கிறதாம் காவலன். சிறுத்தை 16 கோடி. விஜய் கிட்ட மோத முடியுமா என்கிறார்கள் கனிசமாக லாபம் பார்த்து வரும் விநியோகஸ்தர்கள்.! தமிழ்நாட்டில் வெளியான பிறகே யுகே-யில் காவலன் வெளியானது. இப்படம் ஆடுகளம், சிறுத்தை படங்களைவிட அதிகம் வசூலித்தது மட்டுமின்றி இப்போதும் கலெக்சனை அள்ளி வருகிறது. முதல் வார இறுதியில் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் 23வது இடத்தைப் பிடித்த விஜய் படம் இரண்டாவது வார இறுதியில் 29வது இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது வார இறுதியில் 11 திரையிடல்களில் இப்படம் 18,562 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இரண்டாவது வாரம் வரை இதன் மொத்த யுகே வசூல் 96,889 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 71.11 லட்சங்கள். 2011ல் வெளியான தமிழ்ப் படங்களில் இதுவே டாப் யுகே கலெக்சன் என்பது குறிப்பிடத்தக்கது. |
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment