Pages

Saturday, February 19, 2011

இலங்கைக்கு எதிராக நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்


தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை ராணுவம் சிறை பிடித்ததைக் கண்டித்து, நாகப்பட்டினத்தில் வருகிற 22-ந் தேதி நடிகர் விஜய் ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்கிறார். 
தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது, அவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொல்வது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் நாகை, காரைக்காலை சேர்ந்த 112 மீனவர்களை, இலங்கை ராணுவம் சிறை பிடித்தது.

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், மேலும் 24 தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் மீண்டும் சிறை பிடித்துள்ளது.

இலங்கை ராணுவத்தினரின் அட்டூழியத்தைக் கண்டித்து, வருகிற 22-ந் தேதி நாகப்பட்டினத்தில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளர் ரவிராஜா நேற்று நாகப்பட்டினத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

"நாகை காடம்பாடி மைதானத்தில் வருகிற 22-ந் தேதி மாலை 4 மணிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்திற்குத் திரைப்பட இயக்குனரும், நடிகர் விஜய் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்குகிறார்.

கூட்டத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கண்டன உரை ஆற்றுகின்றனர். முன்னதாக மேடையில், இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த தரங்கம்பாடியைச் சேர்ந்த மீனவர் பாண்டியன், புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் ஆகியோரின் குடும்பத்திற்கு நிதியுதவியும், நாகையைச் சேர்ந்த 10 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களையும் நடிகர் விஜய் வழங்குகிறார்" என்று ரவிராஜா கூறினார்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment