Thursday, February 17, 2011
யுகே-யில் காவலன்
யுகே-யில் காவலன் குறிப்பிடத்தகுந்த வசூலைப் பெற்றிருக்கிறது. இந்த வருடம் வெளியான தமிழ்ப் படங்களில் காவலனுக்குதான் அதிக வசூல் என்பது விஜய் தரப்புக்கு சந்தோஷம் தரும் செய்தி.
2வது வார இறுதியில் காவலன் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் 29வது இடத்தைப் பிடித்திருந்தது. 3வது வார இறுதியில் 35வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 3வது வார இறுதியில் இதன் யுகே வசூல் 8,346 பவுண்ட்கள். ஒன்பது திரையிடல்களின் மூலம் இந்த வசூலை பெற்றிருக்கிறது.
இதுவரை காவலன் வசூலித்த மொத்த தொகை 1,19,998 பவுண்ட்கள். அதாவது நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 87.74 லட்சங்கள். ரஜினி, கமல் படங்களுக்கு அடுத்து விஜய் படங்களுக்கே யுகே-யில் அதிக வரவேற்பு என்பதை இந்த வசூல் உறுதி செய்திருக்கிறது.
Thanks : Webdunia
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment