Saturday, February 12, 2011
இலங்கை கடற்படைக்கு கண்டனம் : லட்சக்கணக்கான ரசிகர்களுடன் விஜய் ஆர்ப்பாட்டம்!
இலங்கை கடற்படையால் நாகையச்சேர்ந்த தமிழக மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டார். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நாகப்பட்டினம் சென்று கொல்லப்பட்ட ஜெயக்குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, உதவி தொகைகளும் வழங்கிவருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்யும் வரும் 22ம் தேதி ஜெயக்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். விஜய்யை வரவேற்பதற்காக ஏற்பாடுகளை அங்குள்ள ரசிகர் மன்றத்தினர் செய்து வருகின்றனர்.
விஜய்யுடன் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனும் நாகப்பட்டினம் செல்கிறார்.
அன்றைய தினம் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து நாகப்பட்டினம் கடலோர பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று இலங்கை கடற்படைக்கு எதிராக கண்டன கோஷங்கள் விஜய் எழுப்புவார் என்று நாகை,திருச்சி மாவட்டம் விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய்யுடன், அவரது தாய்-தந்தை மற்றும் மனைவியும் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment