Saturday, February 12, 2011
மீனவர்கள் போராட்டத்துக்கு தலைமை ஏற்கிறார் விஜய்
விஜயின் அரசியல் பிரவேஷம் இப்போதைக்கு இல்லை என்று அவரது தந்தை அறிக்கை கொடுத்த சூடு ஆறுவதற்குள் அரசியல் களத்தில் குதிக்கிறார் விஜய்.
காவலன் எதிர்பார்த்ததைப் போல பெரிய வெற்றியை எட்டிவிட்ட நிலையில் தனது அரசியல் நகர்வுகளை ஒவ்வொன்றாக முன்னெடுக்க இருக்கிறார் விஜய்.
இதற்காக இம்மாதம் 22-ஆம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கும் மீனவர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்கிறார் விஜய்.கடந்தமாதம் பொள்ளாச்சியில் நடந்த வேலாயுதம் படப்பிடிப்பில் விஜயை காணும் ஆவலோடு தினசரி இருபதாயிரம் பேர் திரண்டதில் கடுப்பான காவல்துறை தடியடி நடித்தி கூட்டத்தைக் கலைத்திருக்கிறது.
இதைக்கேள்விப்பட்ட விஜய், காவல் நிலையத்துக்குச் சென்று தனது வருத்தத்தை பதிவு செய்திருகிறார். ஆனால் தடியடி நடித்திய செய்தி உள்ளூர் செய்தித் தாள்களில் வரமால் பார்த்துக்கொண்டிருக்கிறது உளவுத்துறை.
இப்படிப்பட்ட நிலையில் நாகப்பட்டினம் மீனவர்கள் மத்தியில் வலுவாக இருந்த விஜய் ரசிகர் மன்றத்தின் மீனவர் அணி, விஜயை அழைத்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முக்கிய பங்கேற்பாளராக வரும்படி அழைப்பு விடுக்க, உடனே யோசிக்காமல் ஒப்புக்கொண்டிருகிறாராம் விஜய்.
இம்மாதம் 22-ஆம் தேதி தமிழக மீனவர்களை தொடர்ந்து குறிவைத்து தாக்கி வரும் சிங்கள
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment