Saturday, January 29, 2011
VIJAY AGAIN IN 3 IDIOTS
தமிழ் 3 இடியட்ஸ்சில் நடிப்பதற்காக விஜய் உடன் மீண்டும் பேச்சுவார்த்த நடத்தப்பட்டுள்ளது.
3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கியதில் இருந்து குழப்பத்தில் தவிக்கிறது, ஜெமினி பிலிம் சர்க்யூட். தமிழில் விஜய்யும், தெலுங்கில் மகேஷ் பாபுவும் நடிக்கம், ஷங்கர் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.
'வேலாயுதம்' படத்தில் நடிப்பதால் தன்னிடம் கால்ஷுட் இல்லை என நடிகர் விஜய் விலகிவிட்டதால் இயக்குனர் ஷங்கர், நடிகர் சூர்யாவை சந்தித்தார்.
இதனை அடுத்து சூர்யா '3 இடியட்ஸ்' நடிக்க இருக்கிறார் என எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால் ஷங்கர், நடிகர் சூர்யா மற்றும் ஜெமினி நிறுவனம் இது குறித்து எதுவும் இதுவரை தகவல் வெளியிடவில்லை.
ஆனால் நடிகர் சூர்யா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடிக்க விருப்பம் தெரிவித்தாக கூறுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.
அது மட்டுமல்லாது கே.வி.ஆனந்த இயக்கத்தில் 'மாற்றான்' படத்தில் நடிக்க கால்ஷுட் ஒதுக்கி இருக்கிறார் சூர்யா. ஆதலால் இயக்குனர் ஷங்கர் ஆலோசனையில் ஜெமினி நிறுவனம் மீண்டும் நடிகர் விஜய் சந்தித்து பேச்சு நடத்தி உள்ளது.
இதன் இடையே 3 இடியட்ஸ் படப்பிடிப்பு ஜனவரி 30ம் தேதி முதல் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், ஒம் வித்யா மற்றும் சத்யராஜ் ஆகியோர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இன்னும் சில நாட்களில் தெரியலாம், '3 இடியட்ஸ்'சின் முதன்மைக் கதாப்பாத்திரம் யாருக்கு என்ப
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment