Saturday, January 29, 2011
VIJAY உள்ளவா வெளியவா 3 IDIOTS
கிட்டத்தட்ட உள்ளே வெளியே ஆட்டம் மாதிரி ஆகிவிட்டது, 3 இடியட்ஸில் ஹீரோவாக நடிப்பது!
3 இடியட்ஸ் படத்திலிருந்து விஜய் விலகிவிட்டார், சூர்யா நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் இப்போது விஜய்யே நடிக்கிறார் என்பதுதான் கோடம்பாக்கத்தில் நேற்று முழுக்கப் பரபரப்பு.
நான்கு தினங்களுக்கு முன்பே படப்பிடிப்பைத் தொடங்கிவிட்ட ஷங்கர், சூர்யா இல்லாமலேயே படத்தை எடுத்து வந்தார். இப்போது சூர்யாவை நிரந்தரமாகவே படத்திலிருந்து நீக்கிவிட்டார் என்று கூறப்படுகிறது.
மீண்டும் இந்தப் படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார் என்றும், ஷங்கருடனான கருத்து வேறுபாடுகள் களையப்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது.
3 இடியட்ஸ் போன்ற கதையில் விஜய் போன்ற மாஸ் ஹீரோ நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று ஷங்கர் கருதியதன் விளைவுதான் இந்த திடீர் மாற்றம் என்கிறார்கள்.
ஆனால் இதுகுறித்து விஜய் மற்றும் ஷங்கர் இருவருமே மவுனம் சாதிக்கிறார்கள். விஜய் தரப்பில் நாம் விசாரித்தபோது, "இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை," என்றார்.
அப்படின்னா... சொல்ல நிறைய இருக்குன்னும் எடுத்துக்கலாமோ!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment