Pages

Friday, January 28, 2011

'3 இடியட்ஸ்' படத்தில் நடிக்கிறார் விஜய்?

Add caption
கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்களுக்கு நீடித்த வந்த குழப்பம் தொடர்ந்து வருகிறது. ஷங்கர் இயக்கும் '3 இடியட்ஸ்' படத்தில் விஜய் நடிக்கமாட்டார் என செய்திகள் வெளியாகின. மேலும் விஜய்-க்கு பதில் சூர்யா நடிப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது '3 இடியட்ஸ்' படத்தில் விஜய் கண்டிப்பாக நடிப்பார் என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது.

7ஆம் அறிவு படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் சூர்யா, '3 இடியட்ஸ்' படத்திலிருந்து விலகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், வேலாயுதம் படத்திற்கு கொடுக்கப்பட்ட கால்ஷீட்டில் சில மாற்றம் செய்து '3 இடியட்ஸ்' படத்திற்கு விஜய் கால்ஷீட் தந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த குழுப்பம் நீடித்து வரும் நிலையில், ஜீவா, ஸ்ரீகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் ஷங்கர் படமாக்குகிறார். க‌‌ரீனா கபூர் வேடத்தை யார் செய்வது என்பது இன்னும் முடிவாகவில்லை. அனேகமாக இலியானாவாக இருக்கலாம். படத்துக்கு நல்ல தமிழ்ப் பெயராக தேடி வருகிறார்கள்.

'3 இடியட்ஸ்' படத்தில் நடிப்பது குறித்து விஜய்யும், இயக்குனர் ஷங்கரும் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. இதற்கு பிறகு தான் '3 இடியட்ஸ்' படத்தில் நடிக்கப் போவது யார் என்பது தெரியும்.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment