Pages

Friday, January 28, 2011

காவலன் 'சூப்பர் ஹிட்'!


பொங்கலுக்கு வந்த படங்களில் ஏகப்பட்ட சர்ச்சைகள் மற்றும் தடைகளைத் தாண்டி சூப்பர் ஹிட் என்று அறிவிக்கப்பட்டுள்ளது விஜய் நடித்த காவலன். 


பொங்கலுக்கு காவலன் படம் வருமா? வராதா? என பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஒரு பக்கம் தியேட்டர்காரர்கள் பிரச்சினை செய்ய, மறுபக்கம் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பின்வாங்க தட்டுத் தடுமாறி ரிலீஸ் செய்தனர் படத்தை.
ஆனால் இன்று படத்துக்கு பிரச்சினை ஏற்படுத்தியவர்களே, படம் குறித்து பாஸிடிவாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை முடிந்து இரண்டு வாரங்களாகும் நிலையில் படங்களின் வசூல் நிலவரம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி விஜய்யின் காவலன்தான் இன்றைய தேதிக்கு முதலிடத்தில் உள்ளது. சென்னை போன்ற நகர்ப்புற திரையரங்குகளில் இப்போதும் ஓரளவுக்காவது ஆன்லைன் புக்கிங் இருப்பது காவலனுக்கு மட்டுமே. மற்ற படங்களைப் பொறுத்தவரை, காட்சி நேரத்தின் போதுதான் டிக்கெட் வாங்கவே வருகிறார்கள்.

குறிப்பாக வார இறுதி நாட்களில் காவலன் படம் கிட்டத்தட்ட ஹவுஸ்புல் என்ற நிலை. கிராமத்துப் பகுதிகளில் ரிலீசான பொங்கல் படங்களில் சிறுத்தையும், இளைஞனுக்கும் பெட்டிக்குத் திரும்ப ஆரம்பித்துவிட்டன. ஆனால் காவலன் ஸ்டெடியாக உள்ளதாகவும், ஆடுகளம் இன்னும் சில தினங்கள் தாக்குப் பிடிக்கக் கூடும் என்றும் கோவை விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment